Saturday, July 25, 2020

வாழ்க நம் பாரதம்; வாழ்க நம் தேசம்


   அந்தோ!!! அய்யகோ!!! என் இந்திய தேசத்திற்கா மீண்டும் இந்த இழிநிலைமை? அன்று, வாணிபம் செய்ய வந்த அந்நிய நாட்டவனோ நம்மில் இருந்த ஒற்றுமையை  கலைத்து, சூழ்ச்சி செய்து,நம்மில் நம்மையே காட்டிகொடுக்க செய்து நம் தேசத்தை அடிமையாக்கினான். அதிலிருந்து நாம்  மீண்டு வர பல போராட்டங்களை  செய்தும் பல நல்ல உயிர்களை இழந்தும் இந்த சுதந்தரத்தை அடைந்தோம். அன்று தமிழகத்திலிருந்து .உ.சிதம்பரனார்  ,பாரதியார் போன்றவரும் மராட்டியத்திலிருந்து  பால கங்காதிரர் என்றும், இன்னும் பலரும், பலமாநிலத்தவரும் மொழி, இனம், மாநிலம் என்று பாராமல் ஒன்று கூடி போராடாவிட்டால் இன்று நாம் சுகந்திர காற்றை சுவாசித்திருக்கமுடியாது. ஒரு நதியானது ஓர் இடத்தில் பிறந்தாலும் அது பல்வேறு இடங்களுக்கு பாய்ந்து செல்கிறது அதுபோல் நாமும் இந்த பரந்த இந்தியாவில் இனத்தால்,மொழியால் மாறுபட்டு இருந்தாலும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம், ஆனால் இன்று நாம் ஒருவரை ஒருவர் இனத்தால், மொழியால் நிந்தித்துக்கொண்டு விலகி நிற்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று சில விநாடிகள்  யோசித்தாயா என் இந்திய இளைஞனே?.இதற்க்கு காரணம் நம் வளர்ச்சியை  கண்டு பொறாமையும், பயமும் கொண்ட அன்னியநாட்டினர். எங்கு நம் தேசம் உலகின் முதல் தரத்தை எட்டி விடுமோ என்று எண்ணி நம்முடன் உறவாடி  நம் நாட்டின் பிரச்சனைகளையும் ,ஒற்றுமையையும்  நன்கு அறிந்தும்,தெரிந்தும் கொண்டு எங்கு எதை தடுத்தால் இவர்களுக்குள் சண்டை வரும் என்பதை நன்கு உணர்ந்து   பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிக்விட்டு நம் அருகில் அமைதியாய்   இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் இருந்து கொண்டு,நீயே அடித்துக்கொண்டாய் நீயே பிரிந்தாய் என்று பழியை நம்மேலேயே போ காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இளைஞனே விழித்துக்கொள்  இன்றே!!! ஒருமுறை  நாம் நம்பி அடிமைபட்டது போதாதா இளைஞனே? வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவனே இந்தியன் அதில் ஒன்றும் தவறில்லை. நம்மால் பல நாடுகள் உயர்ந்தன, உயர்ந்துகொண்டும் இருக்கின்றன. ஊரார்  பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது போல நம் தேசமும் வளர்ந்தது. இந்த வளர்ச்சி பலநாடுகளுக்கும் நம் இந்திய தேசத்தை பார்த்து எங்கே வல்லரசு ஆகிவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது  . அதனால் நம்முள் வேற்றுமையை உருவாக்கி மீண்டும் நம்மை அடிமையாக்க பார்க்கின்றன. அன்னியனுக்குத் தேவை நம் மூளை மட்டும் தான் நம் வளர்ச்சியல்ல. அதனால் விழித்திடு இளைஞனே, நீ விழித்திட சிறிது தாமதம் ஆனாலும் நம் தேசம் இல்லாமல் ஆகிவிடும். ஆதலால் வேற்றுமை இன்றி ஒற்றுமையுடன் வாழ்வோம். நம் எதிரியின் மூக்கை அறுப்போம். ஒற்றுமையே நம் பலம்.ஒன்றுபட்டு வாழ்வோம், நம்தேசத்தை காப்போம், வல்லரசு ஆக்குவோம் என்று சூளுரைப்போம் இந்திய இளைஞனே.

விழித்திடு இந்தியனே
 
இன்றே விழித்திடு
நீ விழிக்காவிடில்
இந்தியா வீழ்ந்து விடும்.
ஜெய் ஹிந்த் ,வந்தே மாதரம்.  

இப்படிக்கு,
.சுபிதா.

No comments:

Post a Comment